எங்கப்பாதான் தமிழகத்துக்கான தண்ணீரை தடுத்து நிறுத்தினார்: உண்மையை சொன்ன கர்நாடக முதல்வர்hellip

முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் தமிழகத்துக்கு தாராளமாக சென்ற கொண்டிருந்த தண்ணீரை தடுத்து நிறுத்தினார் என்று அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி கூறினார்.

துமிழகத்துக்கும், கர்நாடகாவும் இடையே நீண்ட காலமாக தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு சட்டப்படி கொடுக்கவேண்டிய தண்ணீரை கூட கொடுக்காமல் கர்நாடக அரசு வம்பு செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தண்ணீர் விவகாரம் அங்கு ஓட்டு அரசியலாக மாறி விட்டதை இதற்கு காரணம். துமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்தால் எங்கே மக்கள் கோபப்பட்டு ஓட்டு போடாமல் புறக்கணித்து விடுவார்களா என்ற பயத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில், ஹேமாவதி அணை நீரை தும்கூர் மாவட்டத்துக்கு திருப்பி விடமுயற்சி செய்யாத தேவகவுடாவை தும்கூர் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று சில அமைப்பினர் பேசி வருகின்றனர். இது குறித்து தேவகவுடாவின் மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது அவர் பதிலளிக்கையில், முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா தமிழகத்துக்கு தாராளமாக தண்ணீர் தர தயாராக இருந்தார்.

ஆனால் சட்டப்பேரவையில் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தி ஹேமாவதி அணையை தேவகவுடா கட்டினார். தமிழகத்துக்கு தாராளமாக சென்று கொண்டிருந்த தண்ணீரை தடுப்பதற்காகவே அவர் அந்த அணையை கட்டினார் என்று கூறினார்.

More News >>