ஏலத்தில் எடுக்க வேண்டாம் என்று கூறிய கவுதம் கம்பீர்!

கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தன்னை ஏலத்தில் எடுக்க வேண்டாம் என்று கூறியதாக அந்த அணியின் முதன்மை முதன்மை செயல் அதிகாரி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் 2018ஆம் சீசனுக்கான வீரர்களின் ஏலம் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. கடந்த ஏழு ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடினமாக உழைத்த கேப்டன் கவுதம் கம்பீரை ஏலத்திற்கு முன்னர் கொல்கத்தா அணி தக்கவைக்கவில்லை.

ஏலத்தின் போது கொல்கத்தா அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்காதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல் நாளில் ஏலம் போகாத கம்பீரை இரண்டாம் நாள் ஏலத்தில் தில்லி டேர் டேவில்ஸ் அணி ரூ.2.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. கம்பீரை ஏலம் எடுக்காதது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சி.இ.ஓ. வெங்கி மைசூர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தன்னை ஏலம் எடுக்க வேண்டாம் என்று கம்பீர் கேட்டுக் கொண்டதாகவும், அதனால்தான் கம்பீரை ஏலம் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்காக 122 போட்டிகளில் விளையாடி 3,345 ரன்கள் குவித்து, இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>