முட்டாள்கள் தின வேடிக்கை பாப் பாடகர் மீது ரசிகர்கள் கோபம்

மனைவி கருவுற்று இருப்பதாக தவறான தகவலைப் பரப்பிய பாப் ஸ்டார் ஐஸ்டின் பைப்பரின் செயலால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

முட்டாள்கள் தினமான நேற்று இந்த வேடிக்கை நிகழ்ந்துள்ளது. முதல் குழந்தை பிறக்கப்போவதாக கூறி அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜஸ்ட்டின் பைப்பர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து உலகம் எங்கும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டனர்.

சில மணி நேரம் கழித்து மனைவி பால்டுவின்னை மருத்துவர்கள் பரிசோதிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்டின் பைப்பர், முட்டாள்கள் தினத்திற்கான ஒத்திகையாக இது இருக்குமோ என்று பதிவிட்டார். 

இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் ஜஸ்டின் பைப்பரை செல்லமாக கண்டித்து வருகின்றனர். குழந்தை பிறப்பை கேலியான விஷயமாக்க வேண்டாம் என பெண் ரசிகைகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இதுவரை அந்த பதிவுகளை சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து ஜஸ்டின் பைப்பர் நீக்கவில்லை.

More News >>