ஹர்திக் பட்டேலின் மனுவை அவசரமாக ஏற்க்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குஜராத்தில், பட்டேல் சமூகத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் தலைமையில் கடந்த 2015-ல் போராட்டம் நடந்தது. பின்னர், போராட்டம் கலவரமாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விஸ்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த பட்டேல், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஜாம்நகர்  தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. அதனால், கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்குமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் பட்டேல். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஹர்திக் பட்டேல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரச வழக்காக விசாரிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.  அதன்படி நீதிபதிகள் சந்தானகவுடர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது. ஹர்திக் பட்டேல் மனுவை உடனே விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால், தேர்தலில் போட்டியிடும் ஹர்திக் பட்டேலின் கனவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

More News >>