சுட்டெரிக்கும் வெப்பம் குளுமையான யோசனை சொன்ன நடிகை
பாலிவுட் நடிகை கிர்த்தி சோனன் கோடை வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ள ரசிகர்களுக்கு குளுமையான யோசனை கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கோடை வெப்பம் தகிக்கத் தொடங்கியுள்ளது. மலைப்பிரதேசங்கள் மற்றும் கடற்கரைகளில் மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் வெப்பத்தில் இருந்து ரசிகர்கள் தப்பிக்க குளுமையான யோசனையை பாலிவுட் நடிகை கிர்த்தி சோனன் வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு கோடை காலத்தில் மாலத்தீவில் பொழுதைக் கழித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் ஊதா நிற உடையில் அவரது அழகை தரிசிக்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு மீண்டும் கிடைத்துள்ளது. இது போன்ற அழகிய தீவுகளுக்குச் சென்று கோடை வெப்பத்தில் இருந்து தப்பித்து உல்லாசமாக பொழுதைக் கழிக்குமாறு ரசிகர்களை கிர்த்தி சோனன் அறிவுறுத்தியுள்ளார்.