சப்பாத்திக்குள் ரூ.2000, ரூ.500 நோட்டுகள் - அலர்ட் வீடியோவை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்

சப்பாத்திக்குள் ரூ.2௦௦0, ரூ.5௦௦ நோட்டுகளை வைத்து விநியோகிக்கும் வீடியோ பதிவை ரூபா ஐபிஎஸ் வெளியிட்டார்.

இந்த மாதம் 11-ம் தேதி தொடங்கும் மக்களவை தேர்தல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பஜாக, காங்கிரஸ், திரிண முல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலையொட்டி, நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அதிரடி சோதனை வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கார், பஸ், அரசுப் பேருந்துகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் போன்ற இடங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.600 கோடி மதிப்பிலான பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Ingenious ways of luring voters...Concerned authorities may kindly take note. pic.twitter.com/iiJtQe1JjG

— D Roopa IPS (@D_Roopa_IPS) April 1, 2019

இந்நிலையில், ரூபா ஐபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நூதன முறையில் பணம் பட்டுவாடா செய்யும் முறையை விளக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சப்பாத்தியில் ரூ.2௦௦0, ரூ.5௦௦ நோட்டுகளை வைத்து சமைக்கும் முறை தெளிவாக உள்ளது. இதுபோல், வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா  செய்யப்படலாம் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கவனிக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.

 

More News >>