ஆட்டிசம் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? மொபைல் செயலில் அறிமுகம்

ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல...அது ஒரு குறைபாடு என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தியாவில் 125 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிஸம் விழிப்புணர்வு நாளாகவும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிஸம் விழிப்புணர்வு மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளால் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அதனை நமக்கு புரிய வைப்பதற்கான மொழி அவர்களுக்குத் தெரியாது என்கின்றனர் மருத்துவர்கள். இதனால், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை பெற்றோர் சரியாக வளர்க தவறிவிடுகின்றனர்.

நவீன காலப் பெற்றோர்களும் ஆட்டிசம் பாதிப்படைந்த குழந்தைகளை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, உதவும் வகையில் எழுதா பயணம் என்ற நூலை லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஆட்டிசம் பாதித்த குழந்தையின் பெற்றோர் என்ற முறையில் அவர் சந்தித்த நிகழ்வுகள், குழந்தையை வழக்கும் முறையை ஆகியவற்றைத் தொகுத்து இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் பேச வைக்கும் முயற்சியாக அரும்பு மொழி என்ற செயலி அறிமுகமாகியுள்ளது. இந்த செயலில் வாயிலாக ஆட்டிசம் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் குழந்தை ஆர்வலர்கள்.

More News >>