rdquoஓட்டுக்கு நோட்டுrdquo பலகோடி பணம் பறிமுதல்! பண மதிப்புக்கு பிறகும் இவ்வளவு பணம் வந்தது எப்படி?

”ஓட்டு க்கு நோட்டு” கட்டு கட்டான பலகோடி பணம் வருமான வரிதுறை அதிகாரிகளால் பறிமுதல். பண மதிப்பிழப்பிற்க்கு பிறகு இவ்வளவு பணம் அரசியல்வாதிகளிடம் எப்படி வந்தது? குற்றம் செய்வது வாக்களர்களா? இல்லை வேட்பாளர்களா?

இந்தியாவின் அடுத்த பிரதமருக்கான 17 வது நடாளுமன்ற தேர்தல் வரும் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடுமுழுவதும் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இது கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கபடும் நடவடிக்கை எனவும் கூறியிருந்தார். அடுத்து புதிய இரண்டாயிரம் ரூபாய் அறிமுகபடுத்தபட்டது. இரண்டு மாதம் கழித்து புதிய 500 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகபடுத்தபட்டு புழக்கத்தில் விடப்பட்டது. படிப்படியாக 200, 100, 50, 10 ரூபாய் புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தது.

இந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கூறிவந்தனர். கருப்பு பண ஒழிப்பிற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். வங்கி மூலம் பண பரிவர்த்தனை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, என அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டது. இது குறித்து கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு எவ்வளவு கருப்பு பணம், கண்டறியபட்ட்து என எதிர் கட்சிகள் கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய பொருப்பு நிதியமைச்சரான பியூஸ் கோயல் 1.30 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கபட்டிருப்பதாகவும், மூன்று லட்சத்தி 38 ஆயிரம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நிரந்தரமாக மூடபட்டிருப்-பதாகவும் கூறினார்.இது ஒருபுறம் இருக்க கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி வெளியிட்ட பிறகு பறக்கும் படையும் வருமான வரி துறையினர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் நாடு முழுவதும் மேற்கொள்ளபட்ட சோதனையில் 1,354 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், தங்க நகைகள், பொருட்கள் பறிமுதல் செய்யபட்டிருப்பதாகவும், அதில் தமிழகத்தில் மட்டும் 185.38 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணபட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக 833 புகார்கள் பெறப்பட்டு அதில் 37 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு பணமும் அரசியல்வாதிகளிடம் எப்படி வந்த்து? அதுவும் தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் வழங்க எல்லா ரூபாய் நோட்டுக்களும் புத்தம் புதிய நோட்டுக்களாக எப்படி அவர்களிடம் வந்த்து என வாக்களர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணமதிப்பிழப்பினால் மக்களிடம் பண புழக்கம் குறைந்து விட்டதாக கூறும் அரசியல்கட்சி பிரமுகர் வீட்டில் இவ்வளவு பணமும் எப்படி வந்த்து எனவும் இது வரிகட்டி பிறகு தொழில் மூலம் சம்பாதித்தா? அப்படி வரி கட்டிய பிறகு தேர்தலுக்காக சில நூறுகோடிகளை ஓட்டுக்காக மக்களிடம் கொடுத்தால் அடுத்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்யப்படும்போது இந்த பணம் என்ன ஆனது? என வருமான வரிதுறையோ அல்லது உளவு துறைக்கோ சந்தேகம் வராதா? இப்படி பல அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மத்தியில் பணாமதிப்பிழப்பின் போது மாற்றபட்ட கருப்பு பணாமாக கூட இருக்கலாம் என பொதுமக்கள் கூறிவருகின்றனர்., மத்திய அரசு எவ்வளவுதான் கடுய்மையான சட்டத்தின் மூலம் ஊழலையும், வரி ஏய்ப்பையும் தடுக்க நினைத்தாலும். பணம் பதுக்க முடிவு செய்தவர்கள் நாடு சுதந்திரமடைந்த்திலிருந்து இன்று வரை பணாத்தை பதுக்குவது, கள்ள சந்தையில் வியாபாரம் செய்வது என்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். ”மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது” என்னும் வாசகத்தை மட்டுமே வாக்களர்களுக்கும் வேட்பாளருக்கும் பொருத்தமாக இருக்கும். ஓட்டுக்கு நோட்டு கலாச்சாரத்தை மக்களும் வெறுக்க வேண்டும் வேட்பாளார்களும் தவிர்க்கும் பட்சத்தில் நாடு நிச்சயம் முன்னேறும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

More News >>