உடல் எடையை குறைக்க உதவும் நெல்லிக்காய் ஜூஸ்

பருமனான உடலால் அவதிப்படுபவர்கள், தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்துவர உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, கருமையான முடி வளரவும் உதவுகிறது. சரி இப்போ, நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 3

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

உப்பு - சிறிதளவு

செய்முறை:

முதலில், நெல்லிக்காயை சின்ன சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.இதனை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, ஜூஸை தனியாக வடிகட்டிக் கொள்வோம்.

அத்துடன், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.இதன் சுவை துவர்ப்பாக இருக்கும் என்பதால், தேவைப்பட்டால் தேன் சேர்த்தும் அருந்தலாம்.

அவ்ளோதாங்க.. சத்தான நெல்லிக்காய் ஜூஸ் ரெடி..!

More News >>