உங்க ஓட்ட எனக்கு போட்டு என்ன காப்பாத்துங்க - கார்ட்டூன் வெளியிட்டு திருமாவளவனை விமர்சித்த பாஜக

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் களம் கண்டுள்ளார். கடந்த ஒரு வாரமாகச் சிதம்பரம் தொகுதியில் முகாமிட்டு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பொதுமக்களை சந்தித்தும் வாக்கு சேகரித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற திருமாவளவன் நடராஜரை தரிசனம் செய்ததுடன், அங்கிருந்த தீட்சிதர்களிடம் சிறிது நேரம் பேசி அவர்களிடம் வாக்கு கேட்டார். தரிசனத்தின் போது நெற்றி நிறைய விபூதி பூசியிருந்தார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்தப் புகைப்படத்தை வைத்து அன்று - இன்று என கார்ட்டூன் புகைப்படம் போட்டு திருமாவளவனை கலாய்த்துள்ளது தமிழக பாஜக ஐடி விங். அன்று; இந்துக்கள் ஓட்டு வேண்டும் - இன்று; யார் அவர்?" என்று ட்வீட் செய்து கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அன்று: சனாதனத்தை ஒழிக்க நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களையும் இடித்து அகற்ற வேண்டும்.

இன்று: ஐயா இந்துக்களே! உங்க ஓட்ட எனக்கு போட்டு என்ன காப்பாத்துங்க. ஐயா காப்பாத்துங்க” என்று வடிவமைக்கப்பட்டு திருமாவளவனை கிண்டல் செய்யும் தொனியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனத்துக்கு விசிக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

More News >>