அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்வு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது, 9 காசுகள் உயர்ந்து 68.65 காசுகளாக உள்ளது.

நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 68.74 காசுகளாக இருந்த நிலையில், புதன்கிழமையான இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய ரூபாய் மதிப்பு சற்று உயரத் தொடங்கி, 9 காசுகள் வரை உயர்வை அடைந்தது.

புதிய அந்நிய முதலீடுகள் மற்றும் நேர்மறையான வர்த்தக தொடக்கத்தால், இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்வடைந்துள்ளதாக ஃபாரக்ஸ் வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மும்பை வர்த்தக சந்தையின் சென்செக்ஸ் புள்ளி 39,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும், தேசிய வர்த்தக சந்தை 11,700 என்ற குறியீட்டுடன் இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் உள்ளது.

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 69.71 அமெரிக்க டாலராக விற்பனை செய்யப்படுகிறது.

More News >>