இவரு ஆல்தோட்ட பூபதி இல்ல ஆட்டோ தோட்ட பூபதி!
அடிக்கிற வெயில்ல வெளிய தலை காட்ட முடியல, ஹெல்மட்டை கழட்டி வைச்சுட்டு ஸ்டைலா பைக் ஓட்டின பசங்கள, வெயிலுக்கு பயந்துகிட்டு ஹெல்மெட் போட்டு, வண்டி ஓட்றானுக.. இதுக்கெல்லாம் ஹைலைட்டாக கொல்கத்தாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிஜய் பால், தன்னுடைய ஆட்டோவின் மேல் டாப்பில், வெயிலை சமாளிக்க தோட்டம் ஒன்றையே போட்டுள்ளார்.
மாடி தோட்டம் கேட்டுருப்பீங்க, ஆனா இது வேற லெவல் ஆட்டோ தோட்டம்.
கொல்கத்தாவை சேர்ந்த பிஜய் பால், வெயிலை சமாளிக்க தனது ஆட்டோவின் மேல் டாப்பில், புற்களை வைத்து தோட்டம் போல மாற்றியுள்ளார். கடும் வெயிலில் தனது ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு குளிர்ந்த அனுபவத்தை தர எண்ணிய பிஜய் பால், ஆட்டோவின் மேல் எப்படி தோட்டத்தை அமைக்க முடியும் என்று, கடந்த 3 ஆண்டுகளாக பல தோட்டக் காரர்களிடம் கேட்டு, யாரும் உரிய பதிலளிக்காமல், ஏமாற்றம் அடைந்தாராம்.
பின்னர், ஒரு தோட்டக்காரர் கொடுத்த யுக்தியை வைத்து, புற்களை முதலில் வளர்த்து, அதன் பின்னர், செடிகளை வளர்க்க முடியும் என்று அறிந்து கொண்டு அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் பிஜய் பால்.
இவரது இந்த புதிய ஐடியா, வாடிக்கையாளர்களை இவர் ஆட்டோ பக்கம் இழுப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைக்கும் வருமானத்தில், ஒரு பகுதியை, செடி மற்றும் மரக் கன்றுகளை நட்டு வளர்த்து வருவதாகவும், நம்முடைய உலகம் வெப்பமயமாகி வருவதை தவிர்க்க அனைவரும், தங்கள் வீட்டில் இதுபோன்று, செடிகளையும் மரங்களையும் நட்டு வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.