விஜய் சேதுபதி அண்ணா கஷ்டப்படுத்திட்டாரு - மனமுடைந்த திருநங்கைகள்

சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து நடிகர் விஜய் சேதுபதியை கண்டித்து திருநங்கைகள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருப்பார். முதலில் மாணிக்கமாக அறிமுகமாவார் விஜய் சேதுபதி. மாணிக்கம் தன் மனைவி காயத்ரியை விட்டு விட்டு, ஓடிப் போகிறான். ஆறு வருடங்கள் கழித்து மனைவி, குழந்தையை பார்க்க வருகிறார் விஜய்சேதுபதி. ஆனால் ஆணாக இல்லை, திருநங்கையாக. அதிர்ந்துவிடுகிறது குடும்பம். ஆனால் விஜய்சேதுபதியின் மகன், பொண்ணோ, ஆணோ அப்பா இருந்தால் போகும் என்கிறான். அப்பா மாணிக்கம் இப்போது ஷில்பா. அப்பாவான ஷில்பாவை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த பள்ளிக்கு கூட்டிச்செல்கிறான் மகன்.

மனைவி காயத்ரியை விட்டு விட்டு, ஓடிப் போகிறான் கணவன் மாணிக்கம் (விஜய்சேதுபதி). ஆறு வருடங்கள் கழித்து மனைவி, குழந்தையை பார்க்க வருகிறார் விஜய்சேதுபதி. ஆனால் ஆணாக இல்லை, திருநங்கையாக. அதிர்ந்துவிடுகிறது குடும்பம். ஆனால் விஜய்சேதுபதியின் மகன், ``பொண்ணோ, ஆணோ அப்பா இருந்தால் போகும்’’ என்று ஏற்று கொள்கிறான். அப்பா மாணிக்கம் இப்போது ஷில்பா.

மேலும், ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், ஷில்பாவாக இருக்கும் விஜய் சேதுபதி வசனம் பேசுவார். இந்த இரண்டு விஷயத்துக்கும் திருநங்கைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முதலில் இந்தப் படத்தின் லாஜிக்கே தவறு.  ஆணாக இருந்து திருநங்கையாக மாறுபவர்களுக்கும் இயல்பிலேயே அவங்களுடைய உடலில் மாற்றத்தை உணர முடியும். அப்படியே அவர்கள் உணரவில்லை என்றாலும், அவர்களுக்கு பெண்கள் மீது ஈர்ப்பு இருக்காது. குழந்தை பிறந்ததுக்கு பிறகுதான் திருநங்கையாக மாறுகிறார் என்றால் இவையெல்லாமே ஒரே நாளில் ஏற்படுவது இல்லை. படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்குத் திருநங்கைகள் பற்றிய புரிதல் இல்லை என்று ஆதங்கப்படுகின்றனர் திருநங்கைகள்.

மேலும் குழந்தையை கடத்தி விற்றதாக ஷில்பா கூறுவது போன்ற காட்சிகள் தங்களை இழிவுப்படுத்துவது போன்று உள்ளதாக திருநங்கைகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் திருநங்கைகள் வீடியோ வெளியிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில் பேசிய சில கருத்துகள்..

விஜய்சேதுபதி அண்ணா திருநங்கையா நடிக்கிறாருன்னு கேள்விப்பட்டதும் ரிம்ப சந்தோஷத்தோட காத்திட்டு இருந்தோம். இன்னொரு காஞ்சனா பர்க்க போறோம்ன்னு எதிர்பார்த்தோம். ஆனால் படத்தை பார்த்ததும் மனம் உடைந்து போச்சு. திருநங்கைகளை எப்படியெல்லாம் சித்தரிக்கக்கூடாதோ அப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டிருக்கு. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்ணா இப்படி பண்ணத ஏற்றுக் கொள்ளவே முடியல. படத்தில் ஒரு சில காட்சிகளை மாற்றியே ஆகனும். திருநங்கைகள் குழந்தை பாக்கியம் இல்லாதவங்க. அவங்க குழந்தைகள கடத்தி கொண்டு போய் பிச்சை எடுக்க விட மாட்டாங்க’’ என்கின்றனர் வருத்தத்துடன்.

More News >>