பிரான்க் ஷோவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி ஆப்பு
டிக் டாக் செயலியை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிரான்க் (Prank) வீடியோ மற்றும் ஷோக்களுக்கு தடை விதித்துள்ளது.
சீனாவை சேர்ந்த செயலியான டிக் டாக் செயலியால், கலாசாரம் சீரழிவதாகவும், குழந்தைகளின் எதிர்காலம் வீணாவதாகவும் கூறி, அதனை தடை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நிதிபதிகள், சமூகத்தை சீரழிக்கும் செயலிகளை தடுப்பதற்கு, நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு முன்னமே, அரசு அந்த விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது.
மேலும், டிக்டாக் செயலியின் ஆபத்து கருதி இந்தோனேஷியாவில் தடை செய்தது போல இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என்ற முத்துக்குமாரின் வாதத்தை கேட்ட நிதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், தேர்தல் நேரத்தில், வாக்களிக்க பணம் கொடுப்பது போல பல பிரான்க் விடியோக்கள் எடுக்கப்பட்டு வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், அதுபோன்ற பிரான்க் விடியோக்கள் பலரது வாழ்க்கையை பாதிக்கும் என வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதுபோன்ற விடியோக்கள் எடுக்கவும், அதனை ஒளிபரப்பவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.