அடுத்த இன்னிங்ஸ் தெலுங்கில்hellip மெகா ஹிட் இயக்குநர் படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி
நடிப்பில் வித்தியாசமான பரிசோதனைகளை செய்வதில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் விஜய்சேதுபதி. இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் கேரக்டரும் அப்படியான ஒன்று தான்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் ஷில்பா என்கிற திருநங்கை கேரக்டரில் படம் முழுக்க நடித்து அசத்தியிருப்பார். எந்த ஹீரோவும் இப்படியான கேரக்டர்களில் நடிக்க தயங்குவார்கள். ஏனெனில் நடித்தால் ஹீரோ மட்டும் தான் என்பதே உச்ச நடிகர்களின் ஸ்டேட்மெண்ட். ஆனால், எந்த ஹீரோவும் யோசிக்க கூட நினைக்காத பல கேரக்டர்களை தைரியாமாக கையில் எடுப்பது விஜய்சேதுபதி ஸ்டைல்.
விஜய்சேதுபதி அடுத்த கட்டமாக தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கு நடிகர் சாய் தரண் தேஜின் சகோதரரான வைஷ்நவ் தேஜ் அறிமுகமாக இருக்கும் படத்தில் விஜய்சேதுபதி வில்லன் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் சுகுமார் இயக்கி மெகா ஹிட்டான ரங்கஸ்தலம் படத்துக்கு கதை எழுதிய புஜ்ஜி பாபு சனா இப்படத்தை இயக்கவிருக்கிறார். புஜ்ஜி பாபுவிடன் கதை கேட்டதும் பிடித்துவிட படத்திற்கு உடனே ஓகே சொல்லியிருக்கிறார் விஜய்சேதுபதி.
படத்தில் வைஷ்நவ் தேஜ் மற்றும் மனிஷா லீட் ரோலில் நடிக்கிறார்கள். அதில் டெட்லி வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.