ரெட்மி நோட் 5 ப்ரோ: மேம்படுத்தப்பட்ட பீட்டா ROM

கடவுச்சொல் (Password), இரகசிய குறியெண் (PIN) மற்றும் வைரஸ் ஸ்கேனிங் ஆகிய செயல்பாடுகளில் குறைபாடு இருந்ததால் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு பை (Pie)அடிப்படையிலான MIUI 10 பீட்டா ராம் (ROM) இயங்குதளம் 9.3.28 மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதன்முறையாக 9.3.25 என்ற மேம்பட்ட வடிவம் வெளியிடப்பட்டது.

தற்போது லாக் ஸ்கிரீன், பாஸ்வேர்ட், பின் மற்றும் பேட்டரி இண்டிகேட்டர் உள்ளிட்டவற்றில் காணப்பட்ட குறைபாடுகளை நீக்கும் வகையில் இன்னொரு மேம்படுத்தலும் செய்யப்பட்டுள்ளது. இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் கொடுக்கப்படவில்லை.

ரெகவரி ராம் (Recovery ROM) மற்றும் ஃபாஸ்ட்பூட் ராம் (Fastboot ROM) ஆகிய முறைகளில் இயங்குதளத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். இயங்குதளத்தை முழுமையாக மாற்றும்போது (flash) தரவுகளை இழக்க நேரிடும். ஆகவே, இந்த செயல்பாட்டிற்கு முன்பு ஸ்மார்ட்போன் தகவல்களை சேமித்து வைத்துக்கொள்வது அவசியம்.

4 ஜிபி RAM இயக்கவேகம் கொண்ட ரெட்மி நோட் 5 ப்ரோ 1,000 ரூபாய் விலைகுறைப்புக்கு பிறகு 12,999 ரூபாய்க்கும், 6 ஜிபி RAM இயக்கவேகம் கொண்ட போன் 2,000 ரூபாய் விலைகுறைப்புக்கு பிறகு 13,999 ரூபாய்க்கும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அமேசான் (Amazon.in), ஃபிளிப்கார்ட், மி (Mi.com) ஆகியவற்றின் இணையதளங்களிலும் மி நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது.

More News >>