அட்லீயின்nbsp செயலால் `தளபதி 63 படம் பாதியில் நிற்கும் அபாயம்! கண்டுகொள்வாரா விஜய்
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமான ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் தொடங்கி நடந்துவருகிறது. படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். இவர்களோடு கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி என ஒரு பெரிய கூட்டணியே படத்தில் நடிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு.
‘தளபதி 63’ படம் பற்றிய தகவல் என்னவென்றால், படத்தை தொடங்கும் போதே, குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்து தருவதாக அட்லீ , தயாரிப்பு தரப்பான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் சொல்லியிருந்தாராம். ஆனால் பட்ஜெட்டைப் பற்றி கவலைப் படாமல், அளவுக்கு அதிகமாகவே செலவு செய்து படத்தை உருவாக்கிவருகிறாராம் அட்லீ. இதனால் தயாரிப்பு தரப்பு கடும் அதிர்ச்சியிலும், அதிப்தியிலும் இருக்கிறது. ஏற்கெனவே ராஜா ராணி படத்தை தயாரித்த பாக்ஸ் நிறுவனம் அடுத்த படத்தை எடுக்கவில்லை. தெறி படத்தை தயாரித்த கலைப்புலி தாணு, அட்லீ செய்த செலவு பார்த்து மிரண்டுவிட்டார். சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தை தயாரித்த தேணாடாள் நிறுவனம் கடனில் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த செய்தி.
இந்நிலையில், படப்பிடிப்பின் போதே சுதாரித்துக் கொண்டது ஏ.ஜி.எஸ்.நிறுவனம். இது பற்றி அட்லீயிடம் கேட்டால், படத்தின் செலவுக்கு நான் காரணமில்லை என்றும், தயாரிப்பு நிறுவன ஆட்கள் தான் செலவுக்கு அதிகமாக கணக்கு காட்டி பணத்தை அடிப்பதாகவும் சொல்லியிருக்கார் அட்லீ. தங்களது நிறுவனத்தையே குற்றம் சொல்லுவதால், அட்லீ மீது கடும் கோவத்தில் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். தவிர, குறிப்பிட்ட பட்ஜெட்டுக்க்கு மேல் சென்றால் படத்தை நிறுத்துவது குறித்தும் முடிவெடுக்க தயாராகிவிட்டதாம் படக்குழு.
இயக்குநர் அட்லீக்கும், தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கும் நடுவே பனிப்போர் தொடங்கிவிட்டது. ஆனால் தயாரிப்பாளர்கள் மேல் அக்கறை கொள்ளும் விஜய் இந்த விஷயத்துக்கு வாயை திறக்கவே இல்லையே என்று கவலைப்படுகிறதாம் தயாரிப்பு தரப்பு. மேலும், விஜய் கொடுக்கும் இடத்தினால் தான் அட்லீயும் அளவுக்கு அதிகமாக ஆட்டம் போடுவதாகவும் ஒரு பேச்சு கோலிவுட்டில் இருக்கிறது.