கசப்பே இருக்காது.. மொறு மொறு பாகற்காய் வறுவல் ரெசிபி

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மைத் தரும் பாகற்காய் வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 2

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கரம் - கரம் மசாலா

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - பாதி

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், பாகற்காயை வட்டமான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.பாத்திரத்தில், பாகற்காய், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்க்கவும்.

அத்துடன், பாகற்காய் மொறு மொறுப்பாக இருக்க அரிசி மாவு, கடலை மாவு சேர்க்கவும்.

பாகற்காயின் கசப்பு தெரியாமல் இருக்க, தயிர், எலுமிச்சைப் பழ சாறு, உப்பு சேர்க்கவும்.

இவை அனைத்தையும் கலந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பிறகு, வாணலியில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

மசாலாவுடனான பாகற்காயை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெய்யில்விட்டு இரு பக்கமும் பொரித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க... மொறு மொறுப்பான பாகற்காய் வறுவல் ரெடி..!

More News >>