நான்காவது வெற்றிபெறுமா சென்னை? - சொதப்பல் பீல்டிங்க்கு மத்தியில் 170 ரன்கள் சேர்த்த மும்பை

சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை அணி.

ஐபிஎல் தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் சான்ட்னெர் நீக்கப்பட்டு மோகித் சர்மா சேர்க்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி தொடக்க ஜோடிகளாக வழக்கம் போல மும்பை அணிக்கு குயின்டன் டி காக் - ரோஹித் ஷர்மா களம் புகுந்தனர். இவர்கள் முதல் சில ஓவர்களிலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 3வது ஓவரிலேயே நான்கு ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அவரை தொடர்ந்து ரோஹித்தும் 13 ரன்களில் அவுட் ஆகினார். அடுத்த ஓவரிலேயே யுவராஜ் சிங் வெளியேற மும்பை அணி தடுமாறியது. ஆனால் குர்னால் பாண்டியா - சூரியகுமார் யாதவ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். குர்னால் பாண்டியா 42 ரன்கள் எடுத்திருந்த போது வெளியேறினார். மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்துக்கொண்டிருந்த சூர்யகுமார் அரை சதம் கடந்தார். 59 ரன்களில் அவரும் வெளியேற கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா - பொல்லார்ட் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. அவர்களில் அதிரடி உதவியுடன் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது.

More News >>