எனக்கு 1,76,000 கோடி ரூபாய் பணம் இருக்கு, உலக வங்கியில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கு. தேர்தல் ஆணையத்தை அதிரவிட்ட சுயேட்சை வேட்பாளர்.
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர் ராஜேஷ், திமுக தரப்பில் போட்டியிடும் ஆர்.டி.சேகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் வெற்றிவேல், ஆகியோர் வேட்பாளாராக போட்டியிட உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு ஜபமணி ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் சுயேட்சையாக வேட்பாளரான மோகன்ராஜுக்கு கோடிகணக்கான சொத்துக்கள் இருப்பதை அத்தொகுதி வாக்காளர்களை ஆச்சிரியபடுத்தியுள்ளது.
சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை ஆய்வாளார் மோகன் ராஜ்.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள இவரின் அபிடெபிட் (பிரமாணா பத்திரம்) நகல் சமூக வளைதளங்களில் வேகமாக பரப்பபட்டு வருகிறது. ஏனென்றால்? அவர் தன்னை பற்றிய சுயவிவரம் அடங்கிய படிவம் 26 ல் தனக்கு கோடிகணக்கான சொத்து இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மோகன்ராஜ் கூறும்போது, தியாகி நெல்லை ஜபமணி ஜனதா கட்சி என தனது தந்தை பெயரிலேயே கட்சியை வைத்துள்ளார். பெயரில் எழுத்து பிழை, விலாசம் தவறாக உள்ளது, கணக்கு சரியில்லை, தங்கள் மீதான வழக்கு குறித்த விவரம் குறிப்பிடவில்லை என கூறி பல சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகறிக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை தோலுரித்து காட்ட முடிவு செய்துள்ளார்.
அதற்காக பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது வங்கி கணாக்கில் ஒரு லட்சத்தி 76 ஆயிரம் கோடி பணம் இருப்பதாகவும், கோபாலபுரத்தில் ஆறு பங்களா வீடுகள் இருப்பதாகவும், போயஸ் கார்டனில் அர?ண்மனை வீடு, கோடநாட்டில் 600 ஏக்கர் எஸ்டேட் இருப்பதாகவும் மேலும் உலக வங்கியில் தனக்கு 4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் போலியான ஆவணங்களை தயாரித்து சமர்பித்துள்ளார்.
இந்த ஆவனங்களை எல்லாம் சரிபார்த்து உண்மை என முடிவு செய்த தேர்தல் ஆணையம் மோகன்ராஜுக்கு சுயேட்ச்சை சின்னமான “பச்சை மிளகாய்” சின்னத்தை வழங்கியுள்ள சம்பவம் வேடிக்கையின் உட்சத்திற்கே சென்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் ஸ்ட்ரிட் நடவடிக்கையை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவே மோகன்ராஜ் இது போன்று நடந்து கொண்டதாக கூறினார். மேலும், தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கை தன் மீது எடுத்தாலும் அதை தான் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். குறிப்பாக அந்த ஒரு லட்சத்தி 76 ஆயிரம் கோடி 2 ஜி விவகாரத்தை குறிக்கவே சூட்சகமாக அந்த தொகையை குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
மக்களோட சந்தேகம் என்னன்னா? தேர்தலில் போட்டியிடகூடிய ஒரு வேட்பாளர், படிவம் 26ல் பூர்த்தி செய்யபடும் அனைத்து விவரங்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நியதி. ஆனால், மோகன்ராஜ் வங்கி கணக்கில் தனக்கு ஒரு லட்சத்தி 76 ஆயிரம் கோடி பணம் இருப்பதற்க்கான ஆதாரத்தையும் சமர்பித்து, உலக வங்கியில் தனக்கு 4 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறி அதற்கான ஆதாரத்தையும் சேர்த்து சமர்பித்துள்ளார். இத்தனை ஆவணங்களையும் சரிபார்த்த தேர்தல் ஆணையம் அதன் பிறகே அவருக்கு சின்னத்தை ஒதிக்கி இருப்பது வெட்க கேடான ஒன்றாக பார்க்கபடுவதாக கூறுகின்றனர்.
இதேபோல் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த படிவங்களில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பது சந்தேகிக்க வேண்டியுள்ளது. அத்தனை படிவங்களையும் மீண்டும் ஒருமுறை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யபட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதில் மனுவை சரியான முறையில் சரிபார்க்காத அதிகாரி மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கபடும்? அல்லது தலைமை தேர்தல் அதிகாரி இந்த தவறுக்கு என்ன சொல்ல போகிறார் என்பதை எதிர் நோக்கியுள்ளனர் அரசியல்வாதிகள்.
இருப்பினும், மோகன்ராஜ் செய்த இந்த விவகாரம் சரியா? சரி இல்லையா? என்பதை விவாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், அவர், தான் நேர்மையான ஆய்வாளாராக பணியாற்றிவிட்டு கடைசி மூன்று ஆண்டுகள் பணம் சம்பாதிக்க முடிவு செய்து தி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பொருபேற்றுகொண்டு பல இடங்களில் லஞ்சம் வாங்கி தான் அதில் ஒரு பங்கை எடுத்துகொண்டு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்ச பணம் கொடுத்த்தாக ஒரு உண்மையை போட்டுடைத்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ ஆனால் அரசு இவர் கொடுத்த அந்த லஞ்சம் வாங்கியது தொடர்பான வாக்குமூலத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மூலம் தீவிர விசாரனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டால் இவர் தற்போது பெற்றுவரும் ஓய்வுதியம் ரத்து செய்யப்பட்டு சிறை செல்ல நேரிடும் என்பது குறிப்பிட்தக்கது.