அடுத்த வைரலுக்கு தயாராகும் சாஹோ படக்குழு பிரபாசுடன் குத்தாட்டம் போடும் ஆஸ்திரேலிய பாடகி!
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் சாஹோ. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்தாட்ட பாடலுக்கு பிரபல ஆஸ்திரேலிய பாடகி கைலி மினோக் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பாடகியான கைலி மினோகுக்கு பாலிவுட் ஒன்றும் புதிததல்ல. 2009-ம் ஆண்டு வெளியான அக்ஷய் குமாரின் ப்ளூ படத்தில் இடம் பெற்ற ’சிக்கி விக்கி’ பாடலுக்கு ஏற்கனவே கைலி மினோக் குத்தாட்டம் போட்டுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான சிக்கி மிக்கி பாடல், டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆஸ்திரேலிய பாடகி கைலி மினோக் பாலிவுட் மற்றும் டோலிவுட் கலவையாக உருவாகி வரும் சாஹோ படத்தில் பிரபாசுடன் ஒரு குத்தாட்டம் போட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சையின்ஸ் ஃபிக்ஷன் படமான சாஹோ படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக சாஹோ படம் வெளியாகவுள்ளது.