கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 5 பேர் பலி
பாட்னா: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
பீகார் மாநிலம் பாட்னா அருகே பட்டுஹா என்ற பகுதி உள்ளது. இங்குள்ள கங்கை ஆற்றில் நேற்று பயணிகள் சுமார் 15 பேர் படகு சவாரி செய்தனர். அப்போது, படகு ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது படகு திடீரென கவிழ்ந்தது. இதனால், பயணிகள் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 5 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மீதுமுள்ள 10 பேரை மீட்கும் பணியில் தொடர்ந்து குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை எதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.