வில்லியாக ஐஸ்வர்யா ராய்..nbspசுந்தர சோழராக அமிதாப் பச்சன்..nbspஆஹா மணிரத்னம் செம செலக்ஷன் போங்க
மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் ஆகியோரின் கனவாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. இயக்குநர் மணிரத்னமும் நீண்ட காலமாக இந்த முயற்சியை மேற்கொண்டு வந்தார். ஒரு வழியாக மணிரத்னத்தின் கனவு பலித்துவிட்டது.
தலை சிறந்த நாவல் என்பதால் அதன் திரை வடிவத்தில் முன்னணி கதாநாயகர்கள் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். பெரிய பட்ஜெட் படமாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு காரனங்களால் தான் பட வேலைகள் தொடங்க முடியாமல் தள்ளிப்போனது. நாவலில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டவர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவை, வானதி, நந்தினி ஆகிய முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்வது பெரும் சவால்.
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படவேலைகளை தீவிரப்படுத்தி உள்ளார். நடிகர்கள் தேர்வின்போது விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆனால் இருவரும் அதிலிருந்து விலகி விட்டனர். இறுதியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் எனும் தகவல் வெளியே கசிந்துள்ளது.அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், சுந்தர சோழராக அமிதாப் பச்சனும், வல்லவராயன் வந்தியத்தேவனாகக் கார்த்தியும் நடிக்க, பெரிய பழுவேட்டரையராகத் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும், குந்தவை நாச்சியாராகக் கீர்த்தி சுரேஷும் நடிக்க இருக்கிறார்களாம். நாவல் படி நந்தினி கதாபாத்திரம் பேரழகி. ஆனாலும் அந்தக் கேரக்டர் தான் கதையின் வில்லி, இந்தக் கதாபாத்திரம், பல மாறு வேடங்களில் வந்து ஏமாத்து வேலை செய்யும். எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயை விதவிதமான தோற்றங்களில் பார்க்கலாம்.