வயநாடு தொகுதிக்கு பொறுப்பாளர்! டிரான்ஸ்லேட்டர் தங்கபாலுக்கு ராகுல் கிஃப்ட்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்திரபிரதேச மாநிலம் அமேதியிலும், கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று எலிகாப்டர் மூலம் வயநாடு க்கு வந்த ராகுல் காந்தி வந்தடைந்து கேரளா பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள ராகுல் காந்திக்காக அத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக தங்கபாலுவை நியமித்துள்ளது.ஏற்கனவே ,ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் செய்த போது, அவருக்கு மொழி பெயர்பாளராக தங்கபாலு செயல்பட்டார். அப்போது ராகுல் காந்தி ஆங்கிலத்தில் கூறியவற்றை தமிழில் தவறாகஉ மொழி பெயர்த்தார். அவரின் மொழி பெயர்ப்பு தொடர்பாக பல்வேரு மீம்ஸ்கள் நெட்டிசன்களால் பரப்பபட்டு கேலி செய்யபட்டு வந்தது, மீம்ஸ் க்கு பெயர்போன எச்.ராஜா வை முந்தும் அளவுக்கு இவர் மொழி பெயர்ப்பு தொடர்பான மீம்ஸ்கள் பரப்பபட்டு வந்தது.
தேர்தலுக்கு முன்பு ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கும் தங்கபாலு மொழிபெயர்ப்பு செய்வாரா என நெட்டீசன்கள் காத்துக் கொண்டுள்ளனர். தற்போதே, மலையாள மொழி அடங்கிய அவரின் படம் பொருந்திய வாசகங்களை மீம்ஸ்களாக கிரியேட் செய்து நெட்டீசன்கள் கலாய்த்து வருகின்றனர்.