நம்மை பற்றி எப்படி தெரியும் கூகுளுக்கு? #GooglePlatform

அனைத்து இடங்களிலும் கூகுள் ஊடுருவி வருகிறது. கூகுளுடன் தொடர்பு கொள்ளாமல் ஒரு நாளை கழிப்பது என்பது சிம்ம சொப்பனம். ஏனெனில், கூகுள் மேப் , யூடியூப் இன்றி யாரும் இருப்பதும் இல்லை, அவையின்றி இருக்க விரும்புவதும் இல்லை.

கூகுள் பிளாட்ஃபாமில் இயங்கும், இ-மெயில் சர்வீஸ், மேப் அப்பிகேஷன் உள்ளிட்ட கூகுள் சார்ந்த அப்ளிகேஷன்களை ஒரு மாதத்தில் மட்டும் 1 பில்லியன் மக்கள் சராசரியாக பயன்படுத்துகிறார்கள். நமக்கு, தெரியாது கூகுள் நம்மை ரகசியமாகக் கண்காணித்து வருகிறது என்று. இதைப் பற்றி என்றாவது சிந்தித்து இருக்கிறோமா?

இதோ, கவனியுங்கள் கூகுள் நம்மை கண்காணிப்பதை...

அக்டிவ் கலக் ஷன், பேசிவ் கலக் ஷன் என இரண்டு வகையாக கூகுள் நமது தகவல்களைச் சேகரிக்கிறது.

யூடியூப், ஜி-மெயில் இதர கூகுள் அப்-களை பயன்படுத்தும் போது, sigin கேட்கப்படும். நாமும் யோசிக்காமல் நமது முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்து விடுவோம். இதன் மூலம் கூகுள் நமது தகவல்களை நேரடியாகப் பெற்று விடுகிறது. இது அக்டிவ் கலக் ஷன்.

ஆண்டிராய்டு ஓஎஸ், க்ரோம் உள்ளிட்ட செயலியில் வரும் கூகுள் விளம்பரங்கள் மூலமாகவும் நாம் கண்காணிக்கப்படுகிறோம். நம்ப முடிகிறதா? இது பேசிவ் கலக் ஷன்.

சரி, மொபைல் போனில் லொகேஷன் ஆப்ஷனை turn off செய்துவிட்டால் கூகுள் நம்மைப் பின்தொடராது என்று எண்ணினால்..அது தவறு.

உதாரணத்திற்கு, சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்கிறோம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில் நாம் மொபைல் போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு சென்றாலும் அல்லது செய்தி வாசித்துக் கொண்டே நடந்தாலும், கூகுள் நம்மைப் பற்றிவிடும்.

இது எப்படி சாத்தியம்...கேள்வி எழுகிறதா?

மொபைலில் நீங்கள் எந்த வகையான செய்திகளை விரும்பி படிக்கிறீர்கள் என்பதை history ஆப்ஷன் வாயிலாக அறிந்து கொண்டு தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் மியூசிக்கில் வழியாக இசைகளைக் கேட்கும் போதும் நமது தனிப்பட்ட விருப்ப தகவல்களைக் கூகுள் எடுத்து விடுகிறது.

அண்மையில், அறிமுகம் செய்யப்பட Google Pay –வை உபயோகிப்பதால், நமது கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை மட்டும் கூகுள் சேகரிப்பதில்லை. அதோடு, சேர்த்து நாம் யாரிடம் எங்குப் பொருட்களை வாங்குகிறோம், எத்தனை முறை பண பரிவர்த்தனை செய்கிறோம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தன வசப்படுத்தி விடுகிறது கூகுள்.

இவ்வாறு, நமது தகவல்களை கூகுள் சேகரித்துக் கொள்ள ஆண்டிராய்டு செயலி உதவுகிறது.

More News >>