முட்டைகோஸ் பக்கோடா மசாலா கிரேவி ரெசிபி

முட்டைகோஸைக் கொண்டு பக்கோடா மசாலா கிரேவி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டை கோஸ் - 1 கப்

மைதா மாவு - 1 கப்

சோள மாவு - அரை கப்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

வினிகர் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில், நறுக்கிய முட்டை கோஸ், மைதா மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய்த் தூள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.

வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிளறிவைத்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.

பக்கோடா சூடு ஆறியதும், சின்ன சின்னத் துண்டுகளாக பீய்த்து எடுக்கவும்.வாணலியில், எண்ணெய்விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அத்துடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனைபோகும் வரை வதக்கவும்.

பிறகு, மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா, கறிவேப்பிலை, தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

தற்போது, பீய்த்து வைத்த பக்கோடாவை அத்துடன் சேர்த்து கிளறவும். அத்துடன், சோள மாவை தண்ணீருடன் கலக்கி இதில் ஊற்றி நன்றாக கிளறி கெட்டியாகும் வரை வேக வைத்து இறுதியாக கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சூப்பரான முட்டைகோஸ் பக்கோடா மசாலா கிரேவி ரெசிபி ரெடி..!

More News >>