கார சாரமான மசாலா கார்ன் ரெசிபி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய மசாலா கார்ன் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சோளம் - 400 கிராம்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகத் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

சாட் மசாலா - கால் டீஸ்பூன்

மிளகுத் தூள் - சிறிதளவு

எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது, சோளம் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

பிறகு, தண்ணீரில் இருந்து சோளத்தை வடிகட்டி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

அத்துடன், வெண்ணெய், சீரகத் தூள், மிளகாய்த் தூள், சாட் மசாலா, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

இறுதியாக கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.

அவ்ளோதாங்க.. ஸ்பைசியான மசாலா சோள ரெசிபி ரெடி..!

More News >>