தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகம்... லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 18-ந் தேதி ஏப்ரல் 3-ந்தேதி வரை பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை அந்த அமைப்பின் அமைப்பாளர் திருநாவுக்கரசு சென்னையில் இன்று வெளியிட்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. அமமுக 2 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவுக்கோ 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. தினகரனின் அமமுக கட்சிக்கு 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பல தொகுதிகளில் அதிமுகவை விட அமமுக கூடுதல் ஓட்டுக்களை பெறும் என்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு....லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

More News >>