அஜித்தை பயங்கர அப்செட்டாக்கிய இயக்குநர் - நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தள்ளிப் போக காரணம் இதுதான்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்பொழுது நடித்துவரும் படம் பிங்க் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது.
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் தற்பொழுது அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதலில் அஜித் தாடி, மீசையுடன் இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதாவது கோர்ட் ரூம் சீன்களில் அஜித் தாடியுடன் தோன்றுவார். பிறகு, அஜித் தாடி இல்லாமல் வித்யாபாலனுடனான காட்சிகளும் படமாக்கினார்கள். இதற்கு நடுவே இயக்குநர் ஹெச்.வினோத்துக்கும் அஜித்துக்கும் பல இடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் இருவருக்கும் ஒத்துபோகவே இல்லையாம். இதனால் அஜித் செம அப்செட் என்று சொல்லப்படுகிறது. தவிர, பல இடங்களில் இருவரையும் சமரசம் செய்தே படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூருக்கு இரண்டு படங்கள் பண்ண உறுதியளித்திருக்கிறார் அஜித். அவ்விரு படங்களையும் ஹெச்.வினோத் தான் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் முதல் படத்திலேயே இருவருக்கும் கருத்து முரண் ஏற்பட்டதால், இரண்டாம் படத்தில் அஜித்தை இயக்குவாரா ஹெச்.வினோத் என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என ஒரிஜினல் ஸ்கிரிப்டை இயக்கிய ஹெச்.வினோத்துக்கு ரீமேக் படத்தை இயக்குவதில் ஆரம்பத்திலிருந்தே உடன்பாடில்லை என்றும் சொல்கிறார்கள். இப்படியான பல பிரச்னைகளுக்கு நடுவில் தான் நேர்கொண்ட பார்வை தயாராகிறது. அதனால் தான் படத்தை சொன்ன நேரத்தில் படக்குழுவால் முடிக்கவும் முடியவிலை, சொன்ன தேதியாக மே 1ஆம் தேதி படத்தை வெளியிடவும் இயலவில்லை.
ஆனால், நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி, மாபெரும் வெற்று பெறும் என்றால் இந்த சூழல் நிச்சயம் மாறலாம். அஜித் - வினோத் கூட்டணை எதிர்பார்க்கவும் செய்யலாம்.
மனைவி மீதான கலங்கத்தைப் போக்க நடிகர் நாசர் வெளியிட்ட ஸ்டேட்மெண்ட்