ஆசிரியர் தகுதித் தேர்வு:nbspஏப்ரல்nbsp12ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த, ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் (TET) தேர்வு நடத்தப்படுகிறது. இதை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) எடுத்து நடத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான 'டெட்' தேர்வு அறிவிப்பு கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தேர்வுக்கான கடைசி நாள் ஏப்ரல் 5 (இன்று), விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முயன்றவர்களில் பலரால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் மின்னஞ்சலுக்கு வரும் ‘ஒடிபி’ எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் காலதாமதமாக வந்ததால், தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலவில்லை என்ற புகார் எழுந்தது.
இதனையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி வரை ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.