கிருஷ்ணசாமியா? கிருஷ்ணமூர்த்தியா? தேர்தல் பிரசாரத்தின் போது கன்ஃப்யூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி

மக்களவை தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரட்டை இலையில் போட்டியிட மாட்டேன் என கிருஷ்ணசாமி சபதம் செய்தது தனிக் கதை.

இந்நிலையில், தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது, தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு உங்களின் பொன்னான வாக்குகளை அளியுங்கள் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், கடையநல்லூர் பகுதியில் பிரசாரம் செய்யும்போதும், கிருஷ்ணமூர்த்திக்கு வாக்களியுங்கள் என எடப்பாடி மீண்டும் பிரசாரம் செய்தார்.

இரண்டு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதும், கிருஷ்ணசாமியின் பெயரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாற்றி சொன்னது, புதிய தமிழகம் கட்சி தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு உங்களின் பொன்னான வாக்குகளை அளியுங்கள் என திருத்திக் கொண்டு தனது பிரசாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ளார்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர்கள் யாரேனும் போட்டியிட்டால், முதல்வரின் தயாவால் அவர்களுக்கு வாக்குகள் கிடைத்துவிடும் என அதிமுக மற்றும் புதிய தமிழகம் தொண்டர்கள் தங்களுக்குள் கலாய்த்து பேசி வருகின்றனர்.

அதிமுக பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி மக்களவை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து கிருஷ்ணசாமியை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தென்காசியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணமூர்த்திக்கு வாக்களியுங்கள் என பரப்புரை செய்தார். இதனையடுத்து கடையநல்லூர் பகுதியில் பரப்புரை செய்தபோதும் கிருஷ்ணமூர்த்திக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.

இவ்வாறு இரண்டு இடங்களிலும் வேட்பாளர் பெயரை மாற்றி கூறிய எடப்பாடி பழனிசாமியிடம் வேட்பாளர் பெயர் கிருஷ்ணசாமி என எடுத்துச்சொல்லப்பட்டது. அதன் பின்னர் அவர் பிரச்சாரம் செய்த புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் கிருஷ்ணசாமி என திருத்திக்கூறினார்.

More News >>