சொந்த மண்ணில் ஜெயிக்குமா ஆர்சிபி? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது கேகேஆர்!
ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விராத் கோலியின் கேப்டன்ஷிப் எடுபடாதது ஏன் என்ற கேள்வி? பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. கோலி, டிவில்லியர்ஸ் போன்ற தலை சிறந்த வீரர்கள் இருந்தும் அந்த அணியால், இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையையும் வெல்ல முடியவில்லை.
இந்த ஆண்டு ஐபிஎல் அந்த அணிக்கு இன்னமும் மோசமான தொடக்கத்தை அளித்துள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியே கிடைத்துள்ளது. அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர் பார்த்திவ் பட்டேல் மற்றும் எல்லா போட்டிகளிலும் தனது பணியை சிறப்பாய் செய்கிறார். ஆனால், கேப்டன் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சுனில் நரைன் அணிக்கு திரும்பியுள்ளதால், பெங்களூரு வீரர்களின் விக்கெட்டுகளை விரைவில் எடுத்து சேஸ் செய்து வெற்றி பெறலாம் என கொல்கத்தா அணி இந்த முடிவை எடுத்துள்ளது.
பெங்களூரு மைதானம் என்பதால், இந்த வாய்ப்பை கோலி அண்ட் கோ சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நிறைய ரன்களை குவித்து ஐபிஎல் 2019-ல் தங்கள் அணியின் முதல் வெற்றியை பதிவு செய்வார்களா? என பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொல்கத்தா அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது இந்த போட்டியில் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் மேல் நோக்கிச் செல்லும் முனைப்புடன் பந்து வீச ஆயத்தமாகி வருகிறது.