லிங்க்ட்இன் தளத்தில் கூடுதல் வசதி

வேலை தேடுவதற்கான தளமான லிங்க்ட்இன் (LinkedIn) பயனர்களின் திறன்களை பட்டியலிடுவதற்கு புதிய வசதியை கூடுதலாக தருகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான தளம் லிங்க்ட்இன். இது வேலைவாய்ப்பு தேடுவோருக்கு பெருமளவில் உதவி வருகிறது. பயனர்கள் தங்கள் கல்வி தகுதி, பணி அனுபவம் மற்றும் தனித்திறன்களை இதில் பட்டியலிட்டிருப்பர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களைப் பற்றிய விவரங்களை பயனர்கள் தங்கள் தங்கள் பக்கங்களில் இணைத்திட (attaching) லிங்க்ட்இன் வசதி செய்தது. நவம்பர் மாதம் லிங்க்ட்இன் தளத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள் விவரங்களை பிடிஎஃப் மற்றும் பவர் பாயிண்ட் உள்ளிட்ட ஆவணங்களாக பதிவேற்றம் (upload) செய்யும் வசதி கொடுக்கப்பட்டது.நிறுவனங்களுக்கு தரப்பட்ட வசதி தற்போது தனிப்பட்ட பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் தனித்திறன் மற்றும் மென்திறன் விவரங்கள் தொடர்பான ஆவணங்களை தங்களுக்கான பக்கம், கோவை (feed) மற்றும் குழுக்களில் (group) பிடிஎஃப் மற்றும் பவர் பாயிண்ட் வடிவில் பதிவேற்றம் செய்ய முடியும். இவை குறித்து பின்னூட்டங்கள் இடுவதற்கும், உரையாடுவதற்கும் முடியும்.

கணினி (Desktop) மூலம் லிங்க்ட்இன் பயன்படுத்துவோருக்கு இந்த வசதி கிடைக்கிறது. லிங்க்ட்இன் செயலியில் விரைவில் இப்புதிய வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

More News >>