டிகிரி முடித்த மாற்றுத்திறனாளிகளா நீங்கள்? - இதோ ரிசர்வ் வங்கியில் வேலை!
ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாகவுள்ள உதவியாளர் பணிக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள 27 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவியாளர் (Assistant)காலியிடங்கள்: 27.தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.13,150 - 34,990வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மொழியியல் தேர்வுஅடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in. அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.02.2018.
மேலும் வயதுவரம்பு சலுகை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cgrs.ibps.in/. என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.