உகாதி திருநாளை கோலாகலமாக வரவேற்ற தெலுங்கு மற்றும் கன்னட மக்கள்!

தமிழ் புத்தாண்டை போல தெலுங்கு மற்றும் கன்னடர்களின் புத்தாண்டாக உகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த புது வருடப் பிறப்பை ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாட்க மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

படைக்கும் கடவுளான பிரம்மா இந்த நாளில் தான் உலகை படைத்ததாகவும், நமது தலையெழுத்தை எழுதியதாகவும் ஒரு ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு, படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாளை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளை பேசும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் சந்திர திசையை வைத்து இந்த பண்டிகை முதன்முதலில் தொடங்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

இந்த நாளில் மாங்காய் மற்றும் புளிப்பு வகையிலான பொருட்கள் தான் மிகவும் பிரபலம். மாங்காய் பச்செடி, வேப்பிலை கொழுந்து, வேப்பங்காய், வேப்பம்பூ, புளியங்காய் போன்ற புளிப்பு மற்றும் கசப்பு உணவுகளை இறைவனுக்கு படைத்து, மக்களும் அதை உண்டு மகிழ்வர்.

தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் காலையில் எழுந்து புனித நீராடி புத்தாடை உடுத்தி, ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

உகாதி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.கா.ஸ்டாலின் உகாதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

More News >>