இனி..சென்னை சென்டரல் இல்லை...எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் -அரசாணை வெளியீடு

சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

சென்னை சென்டரல் ரயில் நிலையத்துப் பெயர் மாற்றத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகத் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் பெயரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதனை, தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் பெயரை முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ரயில் நிலையத்தைப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று தற்போது பெயர் மாற்றத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்னர் செய்யப்பட்ட பரிந்துரைக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுப் பெயர் மாற்றம் செய்திருப்பது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

More News >>