ஃபிபா கவுன்சில் உறுப்பினராக இந்தியர் தேர்வு!
ஃபிபா கவுன்சில் உறுப்பினராக இந்தியர் ஒருவர் முதல் முதலில் உறுப்பினராகியுள்ளார்.
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரபுல் படேல்.சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிபா கவுன்சில் உறுப்பினராகத் பிரபுல் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிபா கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் இவரே.மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 29-வது ஆசிய கால்பந்து அமைப்பின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், ஃபிபா கவுன்சில் உறுப்பினர்க்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் பொதுச்செயலர் குஷல் தாஸ், மூத்த துணைத் தலைவர் சுப்ரதா தத்தா, பிரபுல் படேல் உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.இந்த போட்டியில், 46 வாக்குகளில் 38 வாக்குகளைப் பெற்று பிரபுல் படேல் ஃபிபா கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பட்டேலின் வெற்றி குறித்துப் பேசிய சுப்ரதா தத்தா ‘பிரபுல் படேல், வெற்றியானது இந்திய கால்பந்துக்கான அடையாளம், அவரது தலைமையில் இந்தியக் கால்பந்தானது அதீத உயரத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.