முதல் போட்டியிலேயே அரை சதம் விளாசிய டூப்ளசிஸ் - பஞ்சாப்புக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயமடைந்த டிவைன் பிராவோ, ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா ஆகியோருக்கு [பதிலாக பிளெஸிஸ், ஸ்காட் குக்கலீய்ன், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பிடித்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஹர்டூஸ் வில்ஜோன் மற்றும் முஜீப் ஆகியோருக்குப் பதிலாக, கிறிஸ் கெய்ல் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர்.

இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 56 ஆக இருக்கும்போது வாட்சன் 26 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு வாட்சன் - டூப்ளசிஸ் ஜோடி 56 ரன்கள் சேர்த்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூப்ளசிஸ் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்தத் தொடரில் முதல் வாய்ப்பைப் பெற்ற டூப்ளசிஸ், முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். டூப்ளசிஸ் மற்றும் ரெய்னா ஆகியோர் அஷ்வின் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். டூப்ளசிஸ் 54 ரன்களிலும் ரெய்னா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 20 ரன்னில் வெளியேறினார். இருப்பினும் 4வது விக்கெட்டுக்குக் ஜோடி சேர்ந்த தோனி - ராயுடு ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடியது. இதனால் சி.எஸ்.கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.

More News >>