உயிருக்குப் போராடிய ஒரு கர்ப்பிணி தாயின் பாசப்போராட்டம்.. மாங்காய் மரத்தில் ஏறி குழந்தை பெற்ற அதிசயம்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் இடாய் புயல் தாக்கி 450 பேருக்கு மேல் பலி கொண்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த இந்த பயங்கர புயல் காற்றால், மொசாம்பிக்கின் பல பகுதி வெள்ளக்காடாய் மாறின.

அந்த வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி ஒருவர், வெள்ளத்தில் மூழ்கி இறக்க விரும்பாமால், தனது 2 வயது மகனின் உயிரையும் கருவில் உள்ள குழந்தையின் உயிரையும் காப்பாற்றும் தாயுள்ளத்தோடு, அருகில் இருந்த மாங்காய் மரத்தின் மீது ஏறியுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில், மரம் ஏறுவது அவ்வளவு சுலபமான காரியமா என்ன? அந்த பெண்ணுக்கு மரத்தில் ஏறியவுடன் பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வலியால் துடித்தபோதும், உதவிக்கு யாரையும் அழைத்தாலும், ஒருவர் கூட உதவி செய்ய முன் வரவில்லை. தங்களுடைய உயிரையும் உடமைகளையும் காப்பாற்றிக் கொள்ளவே அங்கிருந்தவர்களுக்கு போராட்டமாய் இருந்தது.

சில மணி நேரம் வலியால் துடித்த தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது என தாய் அமெலியா நெகிழ்வுடன் கூறியுள்ளார்.

அந்த வெள்ளத்தில் இருந்து மீட்புப் படையினர் வந்து என்னை மீட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனது மகள் சாரா நலமுடன் உள்ளார் என்ற செய்தி அறிந்ததும் தான் எனக்கு உயிரே வந்தது. எனது மகன் மற்றும் மகளை அந்த வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி என அமெலியா கூறியுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு தாயின் பாசப் போராட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு அமெலியா ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டு.  

More News >>