நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோல் தெரியுமா

பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் முழுமையாக இறங்கிவிட்டார் இயக்குநர் மணிரத்னம்.      இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கியின் நாவலை மையமாக கொண்டு உருவாக இருக்கும் படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு இறுதியாமும் நிலையில் உள்ளது.    தலை சிறந்த நாவல் என்பதால் அதன் திரை வடிவத்தில் முன்னணி கதாநாயகர்கள் இணைவது கூடுதல் பலமாக இருக்கும் என்பதே உண்மை. அதன்படி,  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்.    அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், சுந்தர சோழராக அமிதாப் பச்சனும், வல்லவராயன் வந்தியத்தேவனாகக் கார்த்தியும் நடிக்க, பெரிய பழுவேட்டரையராகத் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும், குந்தவை நாச்சியாராகக் கீர்த்தி சுரேஷும் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.    லைகா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது பொன்னியின் செல்வன். 
More News >>