இணையத்தில் மாயமான எனை நோக்கி பாயும் தோட்டா பாடல்கள்hellip நடந்தது இதுதான்

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள், இணையத்திலிருந்து மாயமானதுக்கு என்ன காரணம் என்பதே பலரின் கேள்வி. 

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாளாக கிடப்பில் கிடக்கும் படம் எனை நோக்கிப் பாயும் தோட்டா. மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இசை தர்புகா சிவா. இப்படத்தின் டீஸர், ‘மறுவார்த்தை பேசாதே’, ‘விசிறி’,  ‘நான் பிழைப்பேனா’ உள்ளிட்ட பாடலுக்கு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. பலரின் மொபைலில் ரிபீட் மோடில் கேட்கப்படும் இப்பாடல்கள் கெளதம் மேனனின் ஒன்றாக யூடியூப் சேனலில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இப்பாடல்கள் திடீரென யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. இதனால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே ரிலீஸ் சிக்கலில் இருக்கும் இப்படத்தில் பாடல்கள் நீக்கப்பட்டவுடன் படம் டிராப்பாகிவிட்டதாகவும் வதந்திகள் பரவின. 

இந்நிலையில் எனை நோக்கிப் பாயும் தோட்டா பட குழுவினரில் ஒருவரிடம் விசாரித்தோம். அந்த தகவலின் படி, படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனத்துக்கு நல்ல விலைக்கு விற்க இருக்கிறார்களாம். அதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதற்காகவே தற்காலிகமாக பாடல்களை பிரைவேட் செய்து வைத்திருக்கிறார்களாம் படக்குழுவினர். பாடல்களை இணையத்திலிருந்து நீக்கவில்லை. சோனி நிறுவனத்திடம் உரிமை சென்றால் இந்தப் பாடல்கள் அப்படியே அதே வியூவ்ஸூடன் சோனி சேனலுக்கு மாற்றப்படும். தவிர, படத்தின் ரிலீஸூக்காகவே பைனான்ஸியர்களிடம் பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது. எப்படியும் படத்தை மே மாதம் திரையில் எதிர்பார்க்கலாம்.

 

More News >>