அந்த விஷயத்துக்கு பெண்களும் சம்மதிக்க வேண்டும்.. நான்கு கைகள் சேர்ந்தால் மட்டுமே திறக்கும் காண்டம் அறிமுகம்!
தாம்பத்திய உறவில் ஆண் மற்றும் பெண்ணின் ஒருமித்த சம்மதம் தேவை என்பதை வலியுறுத்தும் விதமாக அர்ஜெண்டினாவை சேர்ந்த காண்டம் தயாரிக்கும் நிறுவனம், புதுவிதமான காண்டம் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.
ஒரே சமயத்தில் நான்கு மூலைகளையும் திறந்தால் மட்டுமே அந்த காண்டம் பேக் திறக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
அர்ஜெண்டினாவை சேர்ந்த துலிபன் எனும் காண்டம் நிறுவனம் பெண்களுக்கும் உடலுறவு விஷயத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்றும், பெண்களின் விருப்பம் இல்லாமலும், அத்துமீறியும் ஆண்கள் பெண்களை நெருங்க கூடாது என்பதை வலியுறுத்தவே ஆணுறை அட்டைப் பெட்டியில் இந்த புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தங்களின் இந்த புது முயற்சியை அனைத்து காண்டம் கம்பெனிகளும் பின்பற்றினால், பாலியல் பலாத்கார குற்றங்களும் குறையும் என துலிபன் நிறுவன அதிகாரி ஜோக்குவின் கேம்பின்ஸ் இந்த புதுவகை காண்டம் அறிமுக விழாவில் கூறினார்.
அர்ஜெண்டினாவில் 14.5 சதவிகித ஆண்களே முறையாக ஆணுறையை பயன்படுத்துவதாகவும், 65 சதவிகித ஆண்கள் எப்போதாவது மட்டுமே ஆணுறையை பயன்படுத்துவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனால், அங்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகவும், அந்நாட்டு அரசு அண்மையில் கவலை தெரிவித்திருந்தது.
இதனால், காண்டம் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியிலும், காண்டம் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும் முனைந்தது. இதனை கருவாக கொண்டே தாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக ஜோக்குவின் கேம்பின்ஸ் கூறினார்.