பசியில் அழுத பச்சிளம் குழந்தை... - தந்தையின் செயலால் மயங்கிய கொடூரம்
பசியில் அழுத பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுக்காமல் தந்தை செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பிரேம் நகரைச் சேர்ந்தவர் உள்ள ரிக்ஷா டிரைவர் ஒருவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர். இவரது மனைவி கடந்த வருடம் இறந்துவிட 3 வயதே ஆன பெண் குழந்தையை இவரே கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தைக்கு பசி எடுத்தால் பால் வாங்கி கொடுக்காமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக பாட்டிலில் பாலுக்கு பதிலாக மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். குழந்தை இதனை குடிக்க முடியாமல் திணறி மறுத்த போதும் தொடர்ந்து வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளார். இதனால் குழந்தை மயங்கி விழுந்துள்ளது. பின்னர் தானும் நன்றாக குடித்துவிட்டு போதையில் ஆழ்ந்துள்ளனர் அந்த ரிக்ஷா டிரைவர்.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர், வீட்டில் மயங்கி விழுந்து கிடந்த குழந்தையை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்குமாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தையின் அந்தரங்க பகுதியில் நோய் தொற்று உள்ளதாக தெரிவித்தனர். மேலும், சிறுமிக்கு 3 நாட்கள் உணவு கொடுக்கவில்லை எனவும் சிறுமிக்கு பசிக்கும்போது, பாலுக்கு பதிலாக மதுவை அவரது தந்தை கொடுத்ததாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். குடிகார தந்தையை கைது செய்ய வேண்டும் என்று பெண்கள் ஆணைய நிர்வாகி கேட்டுக்கொண்டுள்ளார்.