காமெடி ஏரியாவில் இணைந்த பெண் அமைச்சர்கள்.....மீம்ஸ் கிரியேட்டர்கள் உற்சாகம்.....

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ போன்றவர்களின் பேச்சுக்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். தற்போது அந்த பட்டியலில் பெண் அமைச்சர்கள் சரோஜா, நிலோபர் கபில் இணைந்துள்ளனர்.

மக்களவை மற்றும் இடைத்தேர்தலால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதேசமயம் சூரிய பகவானின் அனல் கக்கும் பார்வையால் கால நிலையும் படு சூடாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களை கொஞ்சல் ரிலாக்சாக வைத்திருப்பது தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ,திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி மற்றும் அரசியல்வாதிகளின் உளறல் பேச்சுதான். அவர்கள் தடுமாறி பேசுவதை மக்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் கலாய்த்து தள்ளுகின்றனர்.

தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடும் வகையில் தமிழக பெண் அமைச்சர்கள் சரோஜா, நிலோபர் கபில் பேசி உள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், பாரத பிரதமராக அப்துல் வர என்று கூறிவிட்டு பின் சுதாரித்து கொண்ட அவர் பாரத பிரதமராக மோடி வர வாக்களிப்பீர் என்று பேசினார். அமைச்சர் சரோஜா பாரத பிரதமர் அப்துல் என்ற அங்கியிருந்த மக்கள் யாருப்பா அது அப்துல் என்று ஒரு கணம் திகைத்து வி்ட்டனர்.

மற்றொரு வேடிக்கையான சம்பவம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் நடந்த அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தமிழக முதல்வர் ஒ.பி.எஸ். அவர்களும், துணை முதல்வர் இ.பி.எஸ். அவர்களும் நமக்கு அருமையான கூட்டணி அமைத்து தந்துள்ளனர் என்று முதலில் பேசினார். பின்பு தனது தவறை உணர்ந்து சாரி என்று விட்டு பின் சரியாக கூறினார்.

தமிழக அமைச்சர்களின் இந்த பேச்சுக்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.

More News >>