தண்ணிதான் ரொம்ப முக்கியம்: சீக்ரெட் சொல்லும் புதுமாப்பிள்ளை விராட்

பெர்சனல், ப்ரோஃபெஷனல் என இரண்டிலும் சொல்லி அடிக்கும் கில்லியாக உள்ள நம்ம கேப்டன் விராட் கோலிக்கு தன் பிட்னெஸ் மீதும் அதிக அக்கறை இருக்கிறதாம்.

சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தான் மட்டும் முதலிடம் பெறாமல் தன் அணியையும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக் கொண்டுவந்த சிறந்த கேப்டனாக அறியப்படுபவர் நம் இந்திய அணியின் நட்சத்திரக் கேப்டன் விராட் கோலி.

விளையாட்டுப் போட்டிகளில் உலகம் முழுவதும் பயணிக்கும் விராட், ’உலகின் எந்த தலைசிறந்த ரெஸ்டாரன்ட்களிலும் சாப்பிடலாம். ஆனால், அம்மா கைப்பக்குவத்தில் கிடைக்கும் சிம்பிளான உணவுக்கு ஈடே இல்லை’ எனக் கூறுகிறார்.

சமீபத்தில் இத்தாலியில் தனது நீண்டகால தோழியான அனுஷ்கா ஷர்மாவை மணமுடித்து விராட் தற்போது மீண்டும் பயிற்சி, ஆட்டம் என களம் திரும்பியிருக்கிறார். தன் ஃபார்மை உச்சத்திலேயே வைக்க நினைக்கும் விராட் தன் பிட்னெஸ் தான் தனது வெற்றிக்குக் காரணமாக உள்ளதாகவும் கூறுகிறார்.

தனது டயட் குறித்து விராட் கூறுகையில், “வீட்டு சாப்பாடுதான் எப்பவும் சிறந்தது. நம் அம்மாக்குத் தெரியாத ஹெல்த் சீக்ரெட் இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாது. தினமும் அதிகமாக உடல் பயிற்சி செய்வேன். அதற்குத் தகுந்தாற்போல ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவேன். ஆனால், நமது ரியல் எனர்ஜி நாம் குடிக்கும் தண்ணீரில்தான் உள்ளது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கிடைக்கும் தண்ணீரை எல்லாம் பருகாமல் சுத்தமான குடிநீரை அதிகளவில் குடித்தாலே நாம் ’ஹெல்த் அண்ட் ஃபிட்’ தான் என்கிறார் கேப்டன்.

More News >>