கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்களுக்கு எழுதி வைத்த நடிகர்
ஜி.வி.பிரகாஷ், சம்யுக்தா, சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம். வாட்ச்மேன். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சுமன் ஒரு அற்புதமான விஷயத்தை சொன்னார்.
நடிகர் சுமன் பேசியதாவது, “நாட்டை காக்கும் காவலர்கள் நமது ராணுவவீரர்கள். அவர்கள் இடையே சாதி மத பாகுபாடுகள் இல்லை. ஒற்றுமையாக எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால் நாட்டுக்குள் இருப்பவர்கள் மத்தியில்தான் சாதி மத வேறுபாடுகள் இருக்கின்றன. ஐதராபாத்தில் உள்ள போக்கீர் என்ற இடத்தில் எனக்கு சொந்தமாக 175 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்து என் உழைப்பால் வாங்கியது. இந்த 175 ஏக்கர் நிலத்தையும் ராணுவ வீரர்கள் நலனுக்காகவும் அவர்கள் குடும்பத்துக்காவும் வழங்க இருக்கிறேன். இந்த நிலத்தை கொடுப்பதற்கு எனது மனைவியும் சம்மதம் தெரிவித்து விட்டார்” இவ்வாறு சுமன் பேசினார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில் “ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு உதவும் நடிகர் சுமன் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். அவரைப்போல் நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்” என்றார்.