ஸ்கைப்: 50 பேர் பேசலாம்
'ஸ்கைப்' (Skype) என்னும் கூட்டு அழைப்பில் தற்போது காணொளி கூட்டு அழைப்பு என்னும் வீடியோ கான்பரசிங் மற்றும் ஒலிவடிவ ஆடியோ கூட்டு அழைப்புகளில் ஐம்பது பேர் கலந்து கொள்ளும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வெவ்வேறு இடங்களில் இருக்கும் நிறுவன பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒரே நேரத்தில் தங்களுக்குள் உரையாடுவதற்கு 'ஸ்கைப்' உதவியாக உள்ளது. இதில் இதுவரை 25 பேர் ஒரே நேரத்தில் உரையாடக்கூடிய வசதி இருந்தது. தற்போது மேலும் 25 பேர் பங்கு பெறும் வண்ணம் இது விரிவாக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 'ஸ்கைப்' அழைப்புக்கான அழைப்பு ஒலிக்குப் (ringing) பதிலாக குழு உறுப்பினர்கள் அறிவிக்கை (notification) ஒன்றை பெறுவர். இது தொந்தரவு தராத விதத்தில் இருக்கும். இந்த அறிவிக்கையை குழு உறுப்பினர்கள் தவற விடுவார்கள் என்று எண்ணும் பட்சத்தில் தனி உறுப்பினர்களுக்கான அழைப்பினை தேர்ந்தெடுத்து அழைக்கலாம்.
உரையாடலில் 25 அல்லது அதற்குக் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்களே பங்கு பெறுவதாக இருந்தால், நேரடி அழைப்பின் (ringing) மூலம் உரையாடலில் இணைக்கலாம்.
தற்போதைய மேம்பட்ட வடிவிலான 'ஸ்கைப்' மென்பொருளில் 50 பேர் உரையாடக்கூடிய கூடுதல் வசதி கிடைக்கிறது.