சிறையில் கும்ரீத்துக்கு ராஜஉபாசாரம் செய்யும் ஹரியானா பா.ஜ.க அரசு

ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 2014ம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக ஹரியானாவில் அரியணை ஏறியது. இதற்கு சாமியார் கும்ரீத் சிங்கும் ஒரு காரணம். தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென கும்ரீத் உத்தரவிட்டார். அவரும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

தற்போது, அந்த நன்றிக்கடனாக மனோகபர் லால் கட்டாரின் பாரதிய ஜனதா அரசு, சிறையில் கும்ரீத்துக்கு ராஜ உபசாரம் செய்கிறது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று ரோக்டக் சிறையில் தங்க வைத்துள்ளது. சிறையில் ஏ.சி அறை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஹனிப்ரீத் என்ற பெண் அவருடன் இருக்கிறார். இவர், கும்ரீத்தின் மகள் என்று சொல்லப்படுகிறது. போலீஸ் உயரதிகாரிகள் பயன்படுத்தப்படும் வசதி அவருக்கு சிறையில் வழங்கியுள்ளது கட்டார் அரசு. போலீஸ் உயரதிகாரிகளும் கும்ரீத்தை குற்றவாளி என்றே கருதவில்லை. மிகுந்த மரியாதையுடன் அவரை நடத்துகின்றனர்.

More News >>