ஏழைகளின் மரபணுவும் மாறுகிறதாம்.. அதிர்ச்சி தரும் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை

வறுமை என்பதே ஒரு மிகக் கொடிய நோய். ஆனால், வறுமையில் வாடும் ஏழைகளின் எண்ண அலைகளால் அவர்களுக்கு அதைவிட மிகப்பெரிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர்களின் மரபணுவே மாறுவதாகவும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாம் ஏழையாக இருப்பது நமது தவறல்ல.. நமது குழந்தைகளாவது ஏழ்மையில் இருந்து விடுபடவேண்டும் என்று எத்தனையோ மக்கள் அன்றாடம் போராடி வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்கு பேரிடி கொடுக்கும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. ஏழ்மையால் அவர்கள் அடையும் மன வருத்தம் காரணமாக அவர்களுக்கு கேன்சர், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் தாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் மரபணுவிலும் அதன் தாக்கம் பதிவதாக அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுமார் 2500 இடங்களில் நடத்திய ஆய்வில், 1500 பேர் டிஎன்ஏக்களில் இந்த மரபணு மாற்றம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மரபணுவில் உள்ள ஜீன்களில் 10 சதவீதம் ஜீன்களில் தாங்கள் ஏழைகள் என்ற கருத்து பதிவாகி உள்ளதாக அந்த ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.

இதுபோன்ற மரபணு மாற்றம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யும் என்றும், இந்த மரபணு மாற்றத்தால் எத்தகைய சமூக மாற்றம் நடக்க உள்ளது என்று தீவிரமாக ஆராய வேண்டும் என நார்த்வெஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் தாமஸ் மெட் டேட் கூறியுள்ளார்.

ஏழை – பணக்காரன் என்ற பேதம் இந்த சமூகத்தை விட்டு எப்போது நீங்குகிறதோ அப்போதுதான் ஏழைகளின் மரபணுவில் மாற்றம் நிகழாமல் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.

More News >>