ஓட்டு போட்டுட்டு செல்பி எடுத்து அனுப்புங்க! ரூ.7,000 வாங்கிக்கோங்க!
மிசோரமில், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் ஒட்டு போட்டுதற்கான அடையாளமான மையுடன் செல்பி எடுத்து அனுப்பினால் முதல் பரிசாக ரூ.7 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இந்த மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. இந்த மக்களவை தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் மொத்தம் 7,84,405 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.81 லட்சம்தான். ஆனால் 4.02 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த மக்களவை தேர்தலில் புதிதாக அல்லது முதல் முறையாக 52,556 பேர் உள்ளனர்.
மிசோரமில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்களை ஊக்குவிக்க வகையில் செல்பி போட்டியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செல்பி போட்டிக்கான விதிமுறைகளும் ரொம்ப சிம்பிள்தான். முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தாங்கள் வாக்களித்தற்கு அடையாளமாக விரலில் வைக்கப்பட்ட அடையாள மை அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து தேர்தல் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினால் போதும்.
அழழாக செல்பி எடுத்து அனுப்பியவர்களின் படங்களில் சிறந்த 3 படங்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசு வழங்கும். சிறந்த முதல் படத்துக்கு ரூ.7,000, இரண்டாவது சிறந்த படத்துக்கு ரூ.5,000ம், 3வது படத்துக்கு ரூ.3,000ம் பரிசாக வழங்க போகுது தேர்தல் ஆணையம்.
போலீஸ் கான்ஸ்டபிளை மின் கம்பத்தில் ஏறச் செய்து 'செல்பி' எடுத்து வம்பில் மாட்டிய சப்-இன்ஸ்பெக்டர்